Gjør som tusenvis av andre bokelskere
Abonner på vårt nyhetsbrev og få rabatter og inspirasjon til din neste leseopplevelse.
Ved å abonnere godtar du vår personvernerklæring.Du kan når som helst melde deg av våre nyhetsbrev.
மக்களின் உணவு செயல்கள் ஒவ்வாமையாலே உடலிலுள்ள வளி, தீ, நீர், (வாத, பித்த, கபம்) ஆகிய மூன்றும் தத்தம் இயற்கையளவில் மிகுந்தும் குறைந்தும் நோய் உண்டான காலத்து, நமது முன்னோர் அந்நோய்களை வெயிலிற் காய்தல், எண்ணெய் முழுக்கு, பட்டினியிருத்தல், உணவு முறைகளில் மாற்றம் செய்தல் போன்ற, இயற்கையானதும் எளிதானதுமான பக்குவங்களால் அவற்றைத் தீர்த்து வந்தனர். இவை போதாதெனில் பச்சிலை,கொடி, வேர், கிழங்கு, பூ, காய், கனி, வித்து முதலானவற்றாலாகிய சாறு, குடிநீர், எண்ணெய், இலேகியம் போன்ற மருந்துகளைக் கொடுத்தனர். இதனாலும் தீர்க்கவியலாத, நோய்களுக்கு, உப்புகள், ரசகந்தக பாடாணங்கள் போன்றவற்றால், நீறு, செந்தூரம் போன்ற மருந்துகள் செய்தனர்.
மலர்கள் பலவகை, அவற்றுட் சில, அழகுமட்டும் கொண்டு, காண்பார் கண்களைக் கவரும்; சில குறைந்த அழகும் நிறைந்த மணமும் உடையவாய்க் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும். அழகும் சுவையும் மணமும் ஆய்வதில் அருந்திறன் வாய்ந்தவை தேனீக்கள். அவை, "இணரூழ்த்தும் நாறா மலர்" களை நாடாது, கண்ணைக் கவர்ந்து சுவையும் மணமுமுள்ள தேன் விருந்தளிக்கும் மலர்களையே நாடிச்சென்று தாம் பெறும் தேனின்பத்தைப் பிறரும் பிறவும் பெற விழைவனபோலத் தேனைப் பதமுறச் செய்து உதவும் பண்பு வாய்ந்தவை. நல்லறிஞரும் தேனியனையர்; தாம் தேர்ந்து பயின்ற நன்னூற் பொருள்களை வகைப்படுத்திச் சின்னூலுணர்ந் தாரும் கற்றுப் பயன்பெறும் வகையில் நூல் வடிவாக்கித் தருபவர். முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதரும் அத்தகைய அறிஞர் குழுவைச் சார்ந்தவர். அவர் தரும் நூல்கள் அறிவின் களஞ்சியம் எனலாம்; தெவிட்டாத தேன்பிலிற்றும் தேனடை எனினும் இழுக்காது. செல்வத்தின் வகையைச் சிறக்க விளக்கும் இச் சிறுநூல், கி. ஆ. பெ. வி. யின் கலை நலங்கனிந்து விளங்குவது; பலவகைக் கருத்துக்களைச் சில பக்கங்களில் தெள்ளிதின் விளக்குவது; உருவிற் குறியதாயினும், உறு பயனளிப்பதில் 'தானே உவமை தனக்கு.' பயன்பெற விழையும் பண்புடையார் படித்துச் சுவைத்துப் பயனடைக!
வள்ளலாரும் அருட்பாவும் என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். இந் நூலுக்கு ஜி ஆர் தாமோதரன் அணிந்துரை எழுதியுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் தோன்றி பெரும் சமய புரட்சி செய்த வள்ளலார் பற்றியும் அவர் எழுதிய அருட்பா பற்றியும் எழுதப்பட்ட நூல் இது. முதல் 27 பக்கங்களில் வள்ளலாரின் வாழ்க்கைக் குறிப்பை எளிய நடையில் அளிக்கிறார். பின்பு மீதி உள்ள பக்கங்கள் அனைத்திலும் சமூக மற்றும் சமய நெறியில் அருட்பாவின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.
திருக்குறள், தொட்டனைத்து ஊறிச் சுரக்கும் அறிவுக் கேணி. திருக்குறளின் பொருள் வளமையும் சிறப்பும் கற்கக் கற்கப் பெருகிக் கொண்டே இருக்கும். முத்தமிழ்க் காவலர் அவர்கள் திருக்குறளைத் தொட்டு நயங்காட்டும்போது, புதுப்புதுச் சுவையும், அழகும், செழுமையும் ஒளி வீசுகின்றன. அவை நம்மையும் திருக்குறள் சிந்தனையாளராக உயர்த்துகின்றன. செயல் திறனே உருவான முத்தமிழ்க் காவலர் அவர்களின் 'திருக்குறளில் செயல்திறன்' திருக்குறளுக்குச் சிறப்புச் சேர்ப்பதுடன், செயலாண்மை ஊக்கத்தையும் அனைவருக்கும் தரும் என்பதில் ஐயமில்லை, தமிழ் ஆர்வமுள்ளோருக்கு நல்ல அறிவு விருந்து, செயல் திறன் உடையோருக்கு மகிழ்வூட்டும் பாராட்டு; செயல் திறனை மறந்தோர்க்கு நினைவூட்டி இடித்துரை நல்கும் வழிகாட்டி- இந்நூல்.
Abonner på vårt nyhetsbrev og få rabatter og inspirasjon til din neste leseopplevelse.
Ved å abonnere godtar du vår personvernerklæring.