Utvidet returrett til 31. januar 2025

Bøker av R. Muthukumar

Filter
Filter
Sorter etterSorter Populære
  • av R. Muthukumar & &&&.
    174,-

    இந்தியையும் இந்தியாவையும் எதிர்த்து 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடுத்த போரின் வரலாறு. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற இந்தியா மேற்கொண்ட போராட்டம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இந்தியிடம் இருந்து விடுதலை பெற தமிழகம் நடத்திய போரட்டமும் முக்கியம். மொழிப்போரில் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்ற போதும் இது ஆயுதந்தாங்கிய போர் அல்ல. தமிழர்கள் மீது மத்திய அரசு வலுக்கட்டாயமாகத் திணித்த ஒரு அயல் மொழியை எதிர்த்து, தாய்மொழியாம் தமிழை முன்வைத்து நடத்தப்பட்ட ஒரு நீண்ட அரசியல் உரையாடல். காந்தி, நேரு, ராஜாஜி, பெரியார், அண்ணா, பக்தவத்சலம், மு. கருணாநிதி, பாரதிதாசன், ம.பொ.சி என்று தமிழக அளவிலும் இந்திய அளவிலும் மொழிபோருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல் கொடுத்த அரசியல் தலைவர்களும் படைப்பாளர்களும் கவிஞர்களும் அநேகம். உடன் ஆயிரக்கணக்கான மக்களும் இணைந்து கொண்டதால் தமிழகச் சரித்திரத்தின் மிக முக்கியமான ஒரு சமூக, சரித்திர நிகழ்வாகவும் மொழிப்போர் விரிவடைந்தது. 1938 தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த ஏழு கட்ட மொழிப் போரட்டங்களும் அன்றைய அரசியல் வரலாற்றுப் பின்னணியுடன் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. திராவிட இயக்க வரலாறு, தமிழக அரசியல் வரலாறு வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கியப் படைப்பு இது.

  • av R. Muthukumar & &&&.
    277,-

    பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது.பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிடர் கழகம் பிரகடனம் செய்த போரில் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்துகொண்டது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகத் தொடங்கி, தமிழ்ச்சமூகத்தை ஆளும் மாபெரும் அரசியல் சக்தியாக திமுகவை அண்ணா வளர்த்தெடுத்ததன் பின்னணியில்தான் எத்தனைப் போராட்டங்கள். தியாகங்கள்!திராவிட இயக்கத்துக்கான ஆரம்பப் புள்ளி உருவான 1909 தொடங்கி அண்ணா மறைந்த 1969 வரையிலான அரசியலும் சரித்திரமும் புத்தகத்தின் முதல் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

  • av R. Muthukumar & &&&.
    330,-

    ¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿. ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿, ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿. ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿?¿¿¿.. ¿¿¿¿.. ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿¿.

  • av R. Muthukumar & &&&.
    229,-

    திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது.திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும் பல பிளவுகளுக்குத் தயாரானது. பிறகு, எமர்ஜென்சி புயலில் சிக்கி, மீண்டு எழுவதற்குள் தேர்தல் தோல்வி. அடுத்த பத்தாண்டுகளுக்கு, எம்.ஜி.ஆரின் சவாலை அவர் சந்திக்கவேண்டியிருந்தது.திமுகவின் முடிவுரையை பலர் எழுத ஆரம்பித்துவிட்ட சமயத்தில், கலைஞர், கட்சியை ஒருங்கிணைத்தார். தமிழகம் அதுவரை அறிந்திராத, வலிமையான எதிர்க்கட்சி இலக்கணத்தை வகுத்து கட்சிக்கு உயிரூட்டினார்.ஜெயலலிதா, வைகோ என்று புதிய தலைவர்கள் அறிமுகமான-போது, திராவிட இயக்கம் விரிந்தும், பிரிந்தும் வளர ஆரம்பித்தது. என்றாலும், திமுக, அதிமுக தவிர்த்து இன்னொரு கட்சியால் இங்கே ஆட்சி செய்ய முடியவில்லை. கட்சிப் பிரிவினைகள் தாண்டி ஒரு வலுவான சக்தியாக, திராவிட இயக்கம் வளர்ந்து பரவியிருப்பதையே இது காட்டுகிறது. அண்ணா மறைந்த 1969 தொடங்கி நேற்று வரையிலான இயக்க வரலாறு இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது.

  • av R. Muthukumar & &&&.
    188,-

    நேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினரைத் தொற்றிக்கொண்டது. லட்சத்தில் ஒருவராக கட்சிக்குள் அவர் கரைந்துவிடுவார் என்று கணித்த விமரிசகர்கள் இந்திராவின் பிரம்மாண்டத்தைக் கண்டு பதுங்கிப் பின்வாங்கினார்கள். ஒரே வீச்சில் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் உள்ளங்கைக்குள் இந்திரா குவித்துக்கொண்டபோது அழுத்தம் தாளாமல் சிதறியோடியவர்கள் இறுதிவரை மீளவேயில்லை. ஆக்ரோஷத்துடனும் ஆவேசத்துடனும் இந்திரா விஸ்வரூபம் எடுத்தபோது ஒட்டுமொத்த தேசமும் கிடுகிடுத்தது. போதும் இனி நீங்கள் வேண்டாம் என்று காலம் தீர்மானித்தபோது ஒரு நெருப்புப் பிழம்பாக மாறி எமர்ஜென்சியைத் திணித்தார். இந்தியச் சரித்திரத்தில் அது ஒரு கறுப்பு அத்தியாயம். ஒவ்வொரு தடுமாற்றத்தையும் ஒவ்வொரு தோல்வியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்ததால்தான் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்திராவால் மீண்டும் ஜொலிக்க முடிந்தது. தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று தீர்மானமாக முடிவு செய்துகொண்டு ஜெயித்துக்காட்டியவர் அவர். பொது வாழ்க்கையில் மட்டுமல்ல தனி வாழ்க்கையிலும் இந்திரா சர்ச்சைக்குரியவரே. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தியின் இரும்பு வாழ்க்கை விறுவிறுப்பான நடையில்.

  • - அரசியலும் வரலாறும்
    av R. Muthukumar
    209,-

  • av N. Chokkan, R. Muthukumar & Badri Seshadri
    195,-

  • av R. Muthukumar
    229,-

  • av R. Muthukumar
    215,-

  • av R. Muthukumar
    202,-

Gjør som tusenvis av andre bokelskere

Abonner på vårt nyhetsbrev og få rabatter og inspirasjon til din neste leseopplevelse.