Om Indira / இந்திரா
நேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினரைத் தொற்றிக்கொண்டது. லட்சத்தில் ஒருவராக கட்சிக்குள் அவர் கரைந்துவிடுவார் என்று கணித்த விமரிசகர்கள் இந்திராவின் பிரம்மாண்டத்தைக் கண்டு பதுங்கிப் பின்வாங்கினார்கள். ஒரே வீச்சில் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் உள்ளங்கைக்குள் இந்திரா குவித்துக்கொண்டபோது அழுத்தம் தாளாமல் சிதறியோடியவர்கள் இறுதிவரை மீளவேயில்லை. ஆக்ரோஷத்துடனும் ஆவேசத்துடனும் இந்திரா விஸ்வரூபம் எடுத்தபோது ஒட்டுமொத்த தேசமும் கிடுகிடுத்தது. போதும் இனி நீங்கள் வேண்டாம் என்று காலம் தீர்மானித்தபோது ஒரு நெருப்புப் பிழம்பாக மாறி எமர்ஜென்சியைத் திணித்தார். இந்தியச் சரித்திரத்தில் அது ஒரு கறுப்பு அத்தியாயம். ஒவ்வொரு தடுமாற்றத்தையும் ஒவ்வொரு தோல்வியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்ததால்தான் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்திராவால் மீண்டும் ஜொலிக்க முடிந்தது. தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று தீர்மானமாக முடிவு செய்துகொண்டு ஜெயித்துக்காட்டியவர் அவர். பொது வாழ்க்கையில் மட்டுமல்ல தனி வாழ்க்கையிலும் இந்திரா சர்ச்சைக்குரியவரே. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தியின் இரும்பு வாழ்க்கை விறுவிறுப்பான நடையில்.
Vis mer